கல்வி

அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் 48 இடங்கள் காலி: நிரப்ப அனுமதி கோரி ஆணையத்துக்கு கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 4 சுற்​றுகளாக கலந்​தாய்வு முடிந்த நிலை​யில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்லூரி​களில் காலி​யாக உள்ள 48 இடங்​களை நிரப்ப, தேசிய மருத்​துவ ஆணை​யத்​திடம் அனு​மதி கேட்கப்பட்டுள்​ளது.

இந்த இடங்​கள் மற்​றும் எய்ம்​ஸ், ஜிப்​மர், நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​கள், மத்​திய பல்​கலைக்​கழகங்​களில் உள்ள எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வை மத்​திய அரசின் சுகா​தார சேவை​களுக்​கான தலைமை இயக்​குநரகத்​தின் (டிஜிஎச்​எஸ்) மருத்​து​வக் கலந்​தாய்வு குழு (எம்​சிசி) ஆன்​லைனில் நடத்​துகிறது.

தமிழகத்​தில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் (85 சதவீதம் இடங்​கள்) மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்​வி, ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்தி வரு​கிறது.

அதன்​படி, 2025-26-ம் ஆண்​டில் தமிழகத்​தில் அரசு மற்​றும் சுயநிதி மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன. நிர்​வாக ஒதுக்​கீட்​டில் 1,736 எம்​பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன.

இந்த படிப்​பு​களில் சேர 72,194 பேர் தரவரிசை பட்​டியலில் தகுதி பெற்​றனர். இதில், 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் அரசுப் பள்ளி மாணவர்​கள், சிறப்பு பிரிவு மாணவர்​களுக்கு மட்​டுமே நேரடி கலந்​தாய்வு நடத்​தப்​பட்​டது. பொதுப் பிரி​வினருக்​கான கலந்​தாய்வு https://tnmedicalselection.net என்ற இணை​யதளத்​தில் ஆன்​லைன் முறை​யில் நடந்​தது. இது​வரை 4 சுற்​றுகளாக கலந்​தாய்வு முடிந்த நிலை​யில், 48 இடங்​கள் காலி​யாக உள்​ளன.

அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு: இதுகுறித்து தமிழக மருத்​து​வக் கல்​வி, ஆராய்ச்சி இயக்​ககத்​தின் மாணவர் சேர்க்கை குழு செயலர் லோக​நாயகி கூறும்​போது, “சென்​னை, கடலூர் அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி​களில் 3 பிடிஎஸ் இடங்​கள் உட்பட தனி​யார் கல்​லூரி​களில் அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீடு என 48 இடங்​கள் காலி​யாக உள்ளன.

அதில், அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான ஒதுக்​கீட்​டில் ஒரு ​பிடிஎஸ் இடமும் காலி​யாக உள்​ளது. இந்த இடங்​களை நிரப்ப, தேசிய மருத்​துவ ஆணை​யத்​திடம் அனு​மதி கேட்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

SCROLL FOR NEXT