கோப்புப் படம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ.8-ம் தேதியுடன் முடிவடைந்தது. 6,574 காலிப்பணியிடங்களுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதும் செய்ய விரும்பினால் அப்பணியை நவ.9 முதல் 11-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம். அதன்படி திருத்தம் செய்ய இன்று இன்று கடைசி நாளாகும். ஜன.10-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. 2 வாரங்களுக்கு முன்பாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.