கல்வி

கேரள கல்வி அமைப்புக்கு தேசிய அங்கீகாரம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள கல்வி அடிப்படைக் கட்​டமைப்பு மற்​றும் தொழில்நுட்​ப அமைப்​புக்கு (கேஐடிஇ) தேசிய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது.

இந்த கேஐடிஇ அமைப்​பின் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பிரி​வாக சமக்ரா பிளஸ் சிறப்​பாக செயல்​படு​கிறது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 6-வது ஆளுகை டிஜிட்​டல் உரு​மாற்ற உச்சி மாநாட்​டில் சமக்ரா பிளஸ் பிரிவுக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

மின்​னணு பயிற்​று​வித்தல், மதிப்​பீடு, டிஜிட்​டல் கல்வி தளம் என்ற பிரி​வில் இந்த விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இத்​தகவலை கேஐடிஇ-​யின் தலை​மைச் செயல் அதி​காரி அன்​வர் சதத் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT