கிருபாகரன்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் மகன், குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025-ம் ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளனர். இதில் காஞ்சிபுரத் தைச் சேர்ந்த கிருபாகரன் தேசிய அளவில் 439-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் நாராயணப் பாளையம் தெருவைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி நடராசன் ஜெயலட்சுமி தம்பதியின் மகன் கிருபாகரன், தற்போது தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கணக்காள ராகப் பணியாற்றி வருகிறார்.
அரசுப் பணியில் இருந்து கொண்டே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதி வந்த இவர், 2025ம் ஆண்டு நடை பெற்ற தேர்வில் நாடு முழு வதும் தேர்வான 958 நபர்களில் ஒருவராக 439-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தனது இந்த வெற்றி குறித்துப் பேசிய கிருபாகரன், எளிய பின்னணியில் இருந்து வந்த தனக்குத் தமிழக அரசின் 'நான் முதல் வன்' திட்டம் உதவியாகவும் இருந்ததாகத் தெரிவித்தார். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், தனது விடாமுயற்சியால் அகில இந்திய அளவில் சாதித் திருப்பது காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் மகிழ்ச் சியையும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையே புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.