கல்வி

கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: கோடை விடு​முறை​யில் பள்​ளிக் குழந்​தைகளுக்கு ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்க இந்​திய - ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக, அதன் பொதுச்​செய​லா​ளர் சுகுணா ராமமூர்த்தி வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய - ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் மொழிப் பள்​ளி, பள்ளி குழந்​தைகளுக்​கான ஜப்​பான் மொழி பயிற்​சி​யைத் தொடங்க உள்​ளது.

          

மொத்​தம் 40 மணி நேரம் கொண்ட இந்த பயிற்​சி​யில் 8 முதல் 17 வயது வரை​யுள்ள குழந்​தைகள் சேரலாம். இந்த பயிற்​சி​யானது, ஜப்​பானிய மொழி பேச்​சுப் பயிற்​சி, ஜப்​பானிய குழந்​தைகளிட​மிருந்து பாடங்​களை அறிந்து கொள்​வது, ஜப்​பானிய மொழி எழுது​வது, பாடல்​கள் படிப்​பது, ஓரி​காமி, ஜப்​பானிய விளை​யாட்​டு​கள் போன்​றவை இடம்​ பெறும்.

இதற்​கான நேரடி வகுப்​பு​கள் தேனாம்​பேட்டை கே.பி.​தாசன் சாலை​யில் அமைந்​துள்ள இந்​திய - ஜப்​பான் தொழில் வர்த்தக சபை வளாகத்​தில் திங்​கள் முதல் வெள்ளி வரை தின​மும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடை​பெறும்.

வகுப்​பு​கள் ஏப்​ரல் மாதம் தொடங்​கு​கின்​றன. பயிற்​சி​யின் நிறை​வில் அனை​வருக்​கும் சான்​றிதழ் வழங்​கப்​படும் இணை​ய​வழி பயிற்சி திட்​டம் மேலும், இணைவழி​யில் ஜப்​பானிய மொழி வகுப்பு ஒவ்​வொரு வார​மும் ஞாயிற்​றுக்​கிழமை மட்​டும் நடத்​தப்பட உள்​ளது.

இப்​ப​யிற்​சி​யில் சேரு​வோருக்கு ஜப்​பானிய மொழி மட்​டுமின்றி ஜப்​பானிய கலை, கலாச்​சா​ரம், வணிக நடை​முறை​கள் ஆகிய​வை​யும் கற்​றுத் தரப்​படும். இந்த வகுப்பு ஏப்​ரல் மாதம் தொடங்​கு​கிறது.

இப்​ப​யிற்​சி​யானது, டிசம்​பர் மாதம் ஜப்​பான் ஃபவுண்​டேஷன் சார்​பில் நடத்​தப்பட உள்ள ‘ஜெஎல்​பிடி என்-5 லெவல்’ தேர்​வுக்கு தயார்​படுத்​தும் வகை​யில் அமைந்​திருக்​கும்.

இந்த இணை​ய​வழி பயிற்சி வகுப்​பில் சேர விரும்​பும் மாணவர்​கள் 98842-00505, 73055-99874 ஆகிய எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். மேலும்​, www.ijcci.com என்​ற இணை​யதளத்​தி​லும்​ விவரங்​களை அறியலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT