கல்வி

நீர் மேலாண்மை ஆய்வு மையத்துக்கு ரூ.5 கோடி நிதி: ஐஐடி முன்னாள் மாணவர் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: ஐஐடி சென்னை​யில் அக்​கு​வா மேப் நீர் மேலாண்மை மற்​றும் கொள்கை ஆராய்ச்சி மையம் இயங்கி வரு​கிறது. மத்​திய அரசின் முதன்மை அறி​வியல் ஆலோ​சகர் அலு​வல​கத்​தின் உதவி​யுடன் செயல்​பட்டு வரும் இந்த மையம், கடந்த 2022-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

அந்த நேரத்​தில் ஐஐடி முன்​னாள் மாணவரும் தீம் வொர்க் அனலிட்​டிக்ஸ் தலை​மைச் செயல் அலு​வலரு​மான பரசு​ராம் பாலசுப்​பிரமணி​யன், இதி​காஷா ஆராய்ச்சி மற்​றும் டிஜிட்​டல் நிறு​வனத்​தின் தலை​வர் கிருஷ்ணன் நாராயணன் ஆகியோர் கணிச​மான நிதி​யுதவி வழங்​கினர்.

          

இந்த மையம் நீர் மேலாண்​மை​யில் ஏற்​படும் சிக்​கல்​களுக்​கான தீர்​வு​களைக் கண்​டறி​யும் பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறது. இந்த நிலை​யில் தற்​போது இந்த ஆராய்ச்சி மையத்​தின் தொடர் வளர்ச்​சிக்​காக முன்​னாள் மாணவ​ரான பரசு​ராம் பாலசுப்​பிரமணி​யன் ரூ.5 கோடி வழங்​கி​யுள்​ளார்.

இது தொடர்​பாக ஐஐடி டீன் (பழைய மாணவர் தொடர்பு மற்​றும் பெருநிறுவன உறவு​கள்) பேராசிரியர் அஷ்​வின் மகாலிங்​கம் கூறும்​போது, “ஐஐடி அக்​கு​வாமேப் நீர் மேலாண்மை மற்​றும் கொள்கை ஆராய்ச்சி மையத்​தின் வளர்ச்​சிக்கு தொடர்ந்து நிதி​யுதவி செய்து வரும் முன்​னாள் மாணவர் பரசு​ராம் பாலசுப்​பிரமணி​யனுக்கு நன்​றியை தெரி​வித்​துக்​கொள்​கிறோம்.

அவரது நிதி​யுத​வி​யானது நீர் மேலாண்மை ஆராய்ச்​சிப் பணிக்கு மட்​டுமின்றி நம் நாட்​டின் நீர் மேலாண்​மை​யில் ஏற்​பட்​டுள்ள சிக்​கல்​களுக்​கான தீர்​வு​களைக் கண்​டறிய​வும் பேருத​வி​யாக இருக்​கும். ஐஐடி-யை பொருத்​தவரை​யில் பழைய மாணவர்​கள்​தான் ஐஐடி மேற்​கொள்​ளும் சமூகரீ​தியி​லான ஆராய்ச்​சிப் பணி​களுக்கு வலிமை​யான தூண்​களாக விளங்​கு​கிறார்​கள்” என்​றார்.

பரசு​ராம் பாலசுப்​பிரமணி​யன் கடந்த 1971-ம் ஆண்டு சென்னை ஐஐடி​யில் பிடெக் பட்​ட​மும், 1973-ல் எம்​டெக் பட்​ட​மும் பெற்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதற்​கிடையே, ஐஐடி​யில் புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள கருத்​தி​யல் கணினி ஆய்வு மையத்​துக்கு முன்​னாள் மாணவர் அரவிந்த் ரகு​நாதன் பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது.

ஐஐடி​யில் பிடெக் பட்​டம் பெற்ற அவர் தற்​போது ஆர்​ஓசி 360 என்ற நிறு​வனத்​தின் இணை நிறு​வன​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.

இந்த ஆராய்ச்சி மையத்​துக்கு தாராள​மாக நிதி​யுதவி அளித்து மாணவர்​களின் முன்​னேற்​றத்​துக்கு அரும்​பணி​யாற்​றிவரும் அரவிந்த் ரகு​நாதனை கவுரவிக்​கும் வகை​யில் இந்த மையத்​துக்கு அவரது பெயர் சூட்​டப்​படு​வ​தாக ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT