ஹஸீரா
வணக்கம், என் பெயர் ஹஸீரா. நான் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது அரசு பொறியியல் கல்லூரி, தர்மபுரியில் B.E-Electrical and Electronics Engineering (4th year) படித்து வருகிறேன். என் அப்பா ஒரு கார் ஓட்டுநர். நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு வாழும் ஒரு குடும்பம். நான் எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக, கனவுகள் இருந்தாலும் அவற்றை அடைய வழி கிடைப்பது ரொம்ப சிரமம்.
கல்லூரியில் முதல் ஆண்டிலிருந்தே “நான் முதல்வன்” திட்டத்தில் நான் பதிவு செய்து தொடர்ந்து course-களில் கலந்து கொண்டு புதுசா நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அதேபோல “நான் முதல்வன் - SCOUT” திட்டத்திலும் நம்பிக்கையோடு பதிவு செய்தேன். கடந்த மாதம் “நான் முதல்வன்” திட்டத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. International Internship-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் அப்படின்னு சொன்னாங்க. அதுவும்... தென் கொரியான்னு கேட்டதும் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
என்னைப் போல் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகளை தென் கொரியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு Internship-க்கு அனுப்பினார்கள். எங்க பத்து பேருக்கும் இதுதான் முதல் விமான பயணம். எங்க குடும்பத்திலேயே விமானத்தில் பயணம் செய்த முதல் நபர் நான்தான். அந்த தருணம் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு தருணம்.
“இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா?” என்பதை உணர்ந்தோம்... கற்றுக்கொண்டோம்... வளர்ந்தோம். தென் கொரியாவில் Pusan National Universityயில் Advanced Sustainable Laboratoryயில் நான் Internship Program-ல் கலந்து கொண்டேன். அங்கு நான் கற்றுக்கொண்டவை: Solar Cell Fabrication, Material Characterisation, Advanced Equipment Handling, Perovskite Materials மூலம் Solar Efficiency Improve செய்வது அதோடு மட்டும் இல்லாமல், அந்த பல்கலைக்கழகத்திலேயே Higher Studies & PhD படிக்க வாய்ப்பு, அதுவும் Stipend உடன் எனக்கு வழங்கப்பட்டது.
எங்களைப் போன்ற எளிய குடும்ப பின்னணி, போதிய நிதி வசதி இல்லாத மாணவர்களுக்கு International Internship-ம், Higher Education-ம் ஒரு கனவாகவே இருந்தது. அந்த கனவு “நான் முதல்வன்” திட்டம் மூலமாக என் வாழ்க்கையில் நனவானது. இந்த மாதிரி உலகளாவிய வாய்ப்புகளை எங்களுக்கு உருவாக்கித் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், “நான் முதல்வன்” மாணவர்கள் சார்பாகவும், எங்களது குடும்பத்தினர் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் போல இருக்கும் மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே: “நான் முதல்வன்” திட்டத்தில் உங்கள் திறனை வளர்க்க நிறைய course-கள் இருக்கிறது. அதில் enroll செய்து முயற்சியுடன் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திறமையை தமிழ்நாடு அரசு கண்டிப்பாக அங்கீகரித்து உங்களுக்கான வாய்ப்பை அவர்களே உருவாக்குவார்கள். அதற்கு நானே ஒரு உதாரணம்.
வானத்தில் நட்சத்திரம் மட்டும் இல்லை... கல்வி இருந்தா நாமும் மின்னலாம். அதற்கு ஒரு சாட்சி தான் நான். இந்த ஒரு பொன்னான வாய்ப்பை எனக்கு அளித்து அயல்நாட்டிற்கு அனுப்பி என் கனவுக்கு அழகு சேர்த்த எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் அது மிகை ஆகாது.
மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/
அழகு சூர்யா
வெற்றி நிச்சயம் திட்டம்
வணக்கம், என் பெயர் அழகு சூர்யா. நான் மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர். என் அப்பா ஒரு விவசாயி. நான் M.Com முடித்திருந்தாலும், நான் மாற்றுத்திறனாளி என்பதாலே எனக்கு வேலை கொடுக்க பல இடங்களில் தயக்கம் காட்டினார்கள். அந்த மறுப்புகள் எனக்குள் நிறைய வலியை உருவாக்கின.
“நமக்கு வாழ்க்கையிலே ஏதாவது நன்மை நடக்குமா?”ன்னு மனசுக்குள்ளே பல முறை கேள்வி வந்தது. அப்படிப் பட்ட ஒரு கட்டத்தில் தான் தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டம் பற்றி கேள்விப்பட்டேன். உடனே எந்த தயக்கமும் இல்லாமல் அதில் பதிவு செய்தேன். அந்த பயிற்சியில் Mobile Phone Repair மற்றும் Computer Classes கற்றுக் கொண்டேன். பாடங்களை theoretical-ஆகவும், practical-ஆகவும் மிக தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள். எத்தனை தடவை சந்தேகம் கேட்டாலும் என்னுடைய ஒவ்வொரு சந்தேகத்தையும் பொறுமையோடு தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள்.
அந்த பயிற்சி என்னை நம்பிக்கையுடன் நிறுத்தியது. இந்த course முடிந்ததும் அதிர்ச்சியும் சந்தோஷமும் தரும் ஒரு விஷயம் நடந்தது. வெற்றி நிச்சயம் திட்டம் மூலமாகவே எனக்கு வேலை கிடைக்க உதவி செய்தார்கள். ஒரு காலத்தில் “இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே சிரமம்”, “பிறந்ததே சாபம்”ன்னு பேசினவர்கள் இருந்தார்கள். ஆனா இன்று... இந்த பயிற்சி மூலமாக வேலை கிடைத்த பிறகு என் குடும்பமே என்னைப் பெருமையோடு பார்க்கிறது.
இன்று இந்த சமுதாயத்தில் நானும் எல்லோரையும் போல உழைத்து வாழ்கிற ஒரு பெண்மணியாக இருக்கிறேன். அந்த உணர்ச்சி... அந்த சந்தோஷம்... வார்த்தைகளால் முழுசா சொல்ல முடியாத ஒன்று. என் வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையை காட்டிய வெற்றி நிச்சயம் திட்டத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி நிச்சயம் - என் வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுத்த ஒரு உண்மை.
மேலும் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/