அ.அருண்குமார்

 
கல்வி

யுபிஎஸ்சி தேர்வில் அரூர் கடைக்கோடி இளைஞர் தேர்ச்சி - கிராம மக்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

அரூர் பகுதி கடைக்கோடி கிராம இளைஞர் அருண்குமார் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்த மலை ஊராட்சி, கட்டரசம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் - கோவிந்தி தம்பதியின் மகன் அ.அருண்குமார் (30). இவர் சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் 5-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

          

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி குன்றிய கடைக்கோடி கிராமமான கட்டரசம்பட்டியில் இருந்து குடிமைப்பணித் தேர்வில் வெற்றிபெற்ற அருண்குமாரால் இக்கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனிப்பு வழங்கி பட்டாக வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேர்வில் வெற்றி பெற்றது குறித்து அ.அருண்குமார் கூறியதாவது: கட்டரசம்பட்டி அரசுப் பள்ளியில் ஆரம்ப கல்வியும், தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரையும், மேல்நிலை வகுப்பினை நம்பிப்பட்டி அன்னை மெட்ரிக் பள்ளியிலும் முடித்தேன். தொடர்ந்து சென்னையில் ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படித்தேன். கல்லூரியில் பயிலும் போது. குடிமைப்பணித் தேர்வில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆல்இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயின்றேன். தொடர்ந்து 7 முறை தேர்வெழுதினேன். குறைந்த மதிப்பெண் இடைவெளியில் நேர்காணல் வரை சென்று சர்வீஸ் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் முயற்சியை கைவிடாது தொடர்ந்து படித்து வந்தேன். 8-வது முறையாக தமிழ் வழியில் தேர்வெழுதினேன். தேர்வு முடிவில் ஆல் இந்தியா அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 585-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன்.

கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயின்றேன். தொடர்ந்து 7 முறை தேர்வெழுதினேன். குறைந்த மதிப்பெண் இடைவெளியில் நேர்காணல் வரை சென்று சர்வீஸ் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் முயற்சியை கைவிடாது தொடர்ந்து படித்து வந்தேன். 8-வது முறையாக தமிழ் வழியில் தேர்வெழுதினேன். தேர்வு முடிவில் ஆல் இந்தியா அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 585-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். என்றார்.

SCROLL FOR NEXT