சென்னை: குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஆக. 11 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மூலமாக உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார் பதிவாளர், சட்டப் பேரவை உதவி பிரிவு அலுவலர், சிறைத்துறை அலுவலர், நன்னடத்தை அலுவலர், கைத்தறி ஆய்வாளர்,முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது