வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சான்றிதழ் வழங்கினார். அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

 
கல்வி

‘சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூடமாட்டோம்' - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழகத்​தில் மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்​ளி​களை மூட மாட்​டோம் என பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

வேலூர் விஐடி பல்​கலைக்​கழகம் சார்​பில் வேலூர், ராணிப்​பேட்டை, திருப்​பத்​தூர் மற்​றும் திரு​வண்​ணா​மலை ஆகிய 4 மாவட்​டங்​களில் 2023-24, 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுகளில் பொதுத் தேர்​வு​களில் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்​ளி​களின் தலைமை ஆசி​ரியர்​களுக்​குப் பாராட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

விஐடி அண்ணா அரங்​கில் நடை​பெற்ற விழாவுக்கு தலைமை தாங்​கிய வேந்​தர் கோ.விசுவநாதன் பேசும்​போது, “தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களின் எண்​ணிக்கை அதி​கம் இருந்​தா​லும் அதன் தரத்தை உயர்த்​து​வதற்கு வேண்​டிய நட​வடிக்​கையை அரசு எடுக்க வேண்​டும். கடந்த 10 ஆண்​டுகளில் இந்​தியா முழு​வதும் 94,000 அரசுப் பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன.

அதேநேரம், 51,000 தனியார் பள்​ளி​கள் புதிதாக திறக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 246 பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன. காரணம் மாணவர்​கள் இல்​லாதது​தான். 1,204 பள்​ளி​களில் மாணவர் சேர்க்கை இல்லை. அரசுப் பள்​ளி​களும் தனியார் பள்​ளி​களுக்கு சமமாக செயல்​பட என்ன செய்ய வேண்​டும் என்​பதை அமைச்​சர் ஆராய்ந்து நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “தவெக அரசு பொறுப்​பேற்ற 6 மாதங்​களில் ஒரு அரசுப் பள்​ளியைக்​கூட மூட​வில்லை. மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்​ளி​களை மூட மாட்​டோம் என்​பதை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

யாரோ ஒரு ஏழை வீட்​டுக் குழந்​தையும் படிக்க வேண்​டும் என்​ப​தற்​காக ஒற்றை ஆசி​ரியருடன் ஒரு பள்​ளிக்​கூடம் காத்​திருக்​கிறது. ஒரு மாணவனுக்​காக அந்த அரசுப் பள்​ளி​களை நாங்​கள் மூட மாட்​டோம்; மூட​வும் விட மாட்​டோம்.

நடப்​பாண்​டில் பள்​ளிக்​கல்​விக்​காக ரூ.44,557 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. பள்ளி நிறைவு திட்​டத்​தின் கீழ் 3,734 அரசுப் பள்​ளி​களை மேம்​படுத்த ரூ.2,132 கோடி மதிப்​பில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 10,000 அரசுப் பள்​ளி​களில் தூய்மை குடிநீர், கழிப்​பறை பராமரிப்பு மற்​றும் பாது​காப்பை உறுதிப்​படுத்த சூப்​பர் கிளீன்,சூப்​பர் கேம்​பஸ் திட்​டத்​துக்​காக ரூ.139 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

விழா​வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 341 அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களைச் சேர்ந்த தலைமை ஆசி​ரியர்​களுக்கு ரூ.52 லட்​சம் மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன. இதில், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்​தரம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT