கோப்புப் படம்

 
கல்வி

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பொது இடமாறுதலுக்கு ஜூன் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது. எனவே, மாறுதல்கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை எமிஸ் இணையதளத்தில் ஜூன் 15 முதல் 22-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பள்ளிக் கல்வித் துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித் துறையில் முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 25-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT