சென்னை: தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு : யுஜிசி நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 3 முதல் நடத்தப்பட உள்ளன.
2-ம் தாளுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமைகளில் காலை 10 முதல் 1 மணிவரையிலும், முதல் தாளுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் 1 மணி வரையும் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் 9080865906 என்ற எண்ணில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.