கோப்புப் படம்

 
கல்வி

பட்டாபிராமில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

ஆவடி: பட்​டாபி​ராமில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு நீட் தேர்​வுக்​கான உண்டு உறை​விட இலவச பயிற்சி வகுப்பை நேற்று திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் பிர​தாப் தொடங்கி வைத்​தார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே பட்​டாபி​ராம் அண்ணா நகர் பகு​தி​யில் அரசு மாதிரி பள்ளி செயல்​பட்டு வரு​கிறது.

இப்​பள்​ளி​யில், மாவட்ட நிர்​வாகம் மற்​றும் பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு நீட் தேர்​வுக்​கான உண்டு உறை​விட இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

          

இதில், திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் பிர​தாப் பங்​கேற்​று, அரசு பள்ளி மாணவர்​களுக்கு நீட் தேர்​வுக்​கான உண்டு உறை​விட இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்​தார். பிறகு, ஆட்​சி​யர், மாணவ-​மாணவி​களிடம் கலந்​துரை​யாடி, அவர்​களை ஊக்​கப்​படுத்​தி, தேவை​யான புத்​தகத் தொகுப்​பு​களை வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வில் ஆட்​சி​யர் பிர​தாப் தெரி​வித்​த​தாவது: திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில், மருத்​து​வக் கல்வி சேர்க்​கை​யில் அரசு பள்ளி மாணவர்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் நோக்​கில் நீட் தேர்​வுக்​கான சிறப்பு உண்டு உறை​விட பயிற்சி வகுப்பு தொடங்​கப்​பட்​டுள்​ளது.

ஏப். 6-ம் முதல் மே 1 வரை நடை​பெற உள்ள இந்த பயிற்​சி​யில், தேர்வு செய்​யப்​பட்ட அரசுப் பள்ளி மாணவர்​கள் 50 பேருக்கு ஆவடி பகு​தி​யில் உள்ள தனி​யார் பயிற்சி நிறு​வனம் வாயி​லாக தரமான நீட் பயிற்சி வழங்​கப்​பட​வுள்​ளது.

நீட் தேர்வு உண்டு உறை​விட பயிற்சி திட்​டம் மாணவர்​களின் நம்​பிக்​கை​யை​யும் திறனை​யும் உயர்த்​தும். இந்த முயற்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்​கள் நீட் தேர்​வில் சிறந்த முடிவு​களைப் பெற்​று, மருத்​து​வக் கல்​வி​யில் அதிக அளவில் சேர்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது என்றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் (பொறுப்​பு) கோ.சுப்​ப​ராவ், மாவட்ட கல்வி அலு​வலர் (தனி​யார் பள்​ளி​கள்) (பொறுப்​பு) லிங்​கேஷ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் லலி​தா, தனி​யார்​ பயிற்​சி நிறு​வன பயிற்​றுநர்​கள்​ பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT