சென்னை: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா அனுப்பிய சுற்றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அந்த மாணவர்கள் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்படுத்த விரும்பவில்லை எனில் அதற்கு அனுமதிக்க வேண்டும்.
அதாவது, வழக்கமான தேர்வு நேரமான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதியம் 1.15 மணி வரை) முடிந்த பின்னர் மாற்றுத் திறனாளிகள் தங்கள் விருப்பத்தின்படி தேர்வு அறையை விட்டுச் செல்லலாம். அதற்கான படிவத்தில் பூர்த்திசெய்து கையொப்பமிட வேண்டும்.
அந்த படிவங்களை தொகுத்து அனைத்து தேர்வுகளும் முடிந்ததும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.