பாலகுருசாமி

 
கல்வி

“துணைவேந்தர் இல்லாமல் தமிழக பல்கலை.களில் குறைகிறது கல்வித் தரம்” - பாலகுருசாமி

செய்திப்பிரிவு

சென்னை: நிர்வாகப் பணிகள் பாதிப்ப தோடு, கல்வித் தரமும் குறைந்து வருவதால் பல்கலைக்கழகங் களில் துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி. தமிழக முதல் வர்ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நிர்வாகம் பாதிப்பு: தமிழகத்தில் 14-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் நீண்ட காலமாக துணைவேந் தர் இல்லாமல் செயல்பட்டு வரு கின்றன. பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர், நிதி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளளன. நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. கல்வி, திட்டம் தொடர்பான பணிகளும் முடங்கியுள்ளன.

துணைவேந்தர் இல்லாததால் புதிய பேராசிரியர்களை நியமிக்க இயலவில்லை. பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, பேராசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. புதிய பணி நியமனம் இல்லாததால், திறமையான இளைஞர்கள் பணி தேடி வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை நேரிடுகிறது.

ஆராய்ச்சி பணிகள் முடக்கம்: பல பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. பேராசிரியர்கள், ஊழியர் களுக்கு உரிய நேரத்தில் ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியவில்லை. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆராய்ச் சிப் பணிகள் முடங்கியுள்ளன. ஆய்வகங்கள் நவீனப்படுத்தப் படாமல் பழைய நிலையில் அப்படியே கிடக்கின்றன. இது போன்ற காரணங்களால், தமிழக பல்கலைக்கழகங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கல்வித் தரத்தை இழந்து வருகின்றன. இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பெருமையை கடுமையாக பாதிக்கும்.

சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு, ஜனநாயக வலிமை ஆகிய வற்றுக்கு எல்லாம் அடித்தளமாக திகழும் உயர்கல்வித் துறையை புறக்கணித்து விட முடியாது. தவிர, ஒரு பல்கலைக்கழகம் தற்காலிக ஏற்பாடு மற்றும் பொறுப்பு அலுவலர்களைக் கொண்டு முழுமையாக செயல்பட முடியாது. எனவே. பதவி காலியாக உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்.

பதிவாளர், நிதி அலுவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வு பணியையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT