கல்வி

தொலை​தூரக் கல்வி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்​டிப்பு: இக்னோ சென்னை மண்​டலம் அறி​விப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக்​கழக (இக்​னோ) சென்னை மண்டல முது​நிலை இயக்​குநர் ஜெ.எஸ்​. ​டாரதி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக்​கழம் (இக்​னோ) தொலை​தூரக் கல்வி திட்​டம் வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் சான்​றிதழ், டிப்​ள​மா, இளநிலை, முது​நிலை படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.

தற்​போது தொலைதூரக் கல்வியில் சேர விரும்​பும் மாணவர்​கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஜூலை 31-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். இந்த வாய்ப்பை அனைத்து தரப்​பினரும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

மாணவர் சேர்க்கை தொடர்​பான விவரங்​களை பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.ignou.ac.in) அறிந்​து​கொள்​ளலாம். மேலும், சென்னை வேப்​பேரி பெரி​யார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலு​வல​கத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்​ணிலும் தொடர்​பு​கொள்​ளலாம்.

இக்​னோ​வின் ஆன்​லைன் படிப்​பு​களில் சேர விரும்​புவோர் https://ignouiop.samarth.edu.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அவர் கூறிஉள்ளார்.

SCROLL FOR NEXT