அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் தினேஷை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.

 
கல்வி

ஈடுபாட்டுடன் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்: முதலிடம் பெற்ற நாகை அரசுப் பள்ளி மாணவர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: ​முழு ஈடு​பாட்​டுடன் படித்​தால் பயிற்சி வகுப்​புக்கு செல்​லாமலேயே நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்று மருத்​துவ படிப்​பில் சேர முடி​யும் என அரசுப் பள்​ளி​களில் முதலிடம் பெற்ற நாகை மாணவர் நம்​பிக்கை தெரி​வித்​துள்ளார்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யம் அருகே உள்ள பெரிய குத்​தகை கிராமத்​தைச் சேர்ந்த முரு​கையன்- உமா​ராணி தம்​ப​தி​யரின் மகன் தினேஷ். விவ​சாய குடும்​பத்​தைச் சேர்ந்த இவர், நாகை மாவட்ட அரசு மாதிரி மேல்​நிலைப் பள்​ளி​யில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்​று, நீட் தேர்வு எழு​தி​னார். இதில் 599 மதிப்​பெண்​கள் பெற்று அரசு பள்ளி மாணவர்​களின் தரவரிசை பட்​டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்​துள்​ளார்.

அவரை நாகை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன் குமார், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கேழ்​கர் சுப்​பிரமண்ய பாலசந்​திரா உள்ளிட்ட பலரும் பாராட்​டி, வாழ்த்து தெரி​வித்​தனர். டிஆர்ஓ பவணந்தி உள்​ளிட்ட அரசு அதி​காரி​கள் உடனிருந்​தனர். இதுகுறித்து மாணவர் தினேஷ் கூறும்போது, நான் வேறு எந்த பயிற்சி வகுப்​பிலும் சேராமல் வீட்​டில் இருந்​த​படியே புத்​தகங்​கள் மற்​றும் இணை​யதளம் மூலம் படித்தேன்.

பள்ளி ஆசிரியர்​களும் எனக்கு எல்லா வித​மான உதவி​களை​யும் செய்​தனர். எனது பெற்​றோரும் உறு​துணை​யாக இருந்​தனர். முழு​மை​யான ஈடு​பாட்​டுடன் படித்​தால், எந்த பயிற்சி வகுப்​புக்​கும் செல்​லாமல் அனை​வ​ராலும் நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்று மருத்​துவ படிப்​பில் சேர முடி​யும் என்​றார்.

SCROLL FOR NEXT