சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், வணிக வரிஉதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத் துறை மாவட்டப் பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிகளில் 28 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 23-ம் தேதிவெளியிடப்பட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 30-ல் தொடங்கி நடந்து வருகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 29 ஆகும். முதல்நிலைத் தேர்வு செப்.6-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
இத்தேர்வு செப்.27-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலர் பனோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.