கல்வி

சிஎஸ்ஐஆர் யுஜிசி ‘நெட்’ தேர்வு தேதி வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்​வுக்​குப் பாடப்​பி​ரிவு​கள் வாரியாகத் தேர்வு தேதி​களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்​ளது.

உதவி பேராசி​ரியர் பத​வி​யில் அறி​வியல், கணித பாடப் பிரிவு​களுக்​காகச் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு நடத்​தப்​படு​கிறது. கலை பாடங்​களுக்​கான யுஜிசி நெட் தேர்வை போன்று இது​வும் ஆண்​டுக்கு 2 முறை (ஜூன், டிசம்​பர்) நடத்​தப்​படு​கிறது.

சிஎஸ்ஐஆர் யுஜிசி தேர்​வுக்​கான டிசம்​பர் தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​கள் ஏற்​கெனவே பெறப்​பட்​டன. இந்​நிலை​யில், பாடப் பிரிவு​கள் வாரியாகத் தேர்வு தேதி​களைத் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி, சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு டிசம்​பர் 19, 22, 27 தேதி​களில் ஒவ்​வொரு நாளும் 2 ஷிப்​டுகளாக நடத்​தப்​பட உள்​ளன. வாழ்​வியல் அறி​வியல், உயிரி தொழில்​நுட்​பப் பாடத்​துக்​கான தேர்வு டிசம்​பர் 19-ம் தேதியும், வேதி​யியல், நிலத்​தியல், காலநிலை, கடல் அறிவியல், விண்​வெளி அறி​வியல் தேர்வு டிச.22-ம் தேதியும், கணிதம், இயற்​பியல் பாடங்​களுக்​கான தேர்வு 27-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT