கோப்புப் படம்

 
கல்வி

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகம்

செய்திப்பிரிவு

சென்னை: பத்​தாம் வகுப்பு மாணவர்​களுக்​கான அசல் மதிப்​பெண் சான்​றிதழ் பள்​ளி​களில் இன்று (ஆகஸ்ட் 12) முதல் விநி​யோகிக்​கப்​படு​கிறது.

தமிழகத்​தில் கடந்த கல்​வி​யாண்​டில் (2025-26) பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு மார்ச் 11 முதல் ஏப்​ரல் 11-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. இந்த தேர்வை சுமார் 9.1 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இதன் முடிவு​கள் மே 20-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இந்த தேர்​வெழு​திய மாணவர்​களுக்​கான தற்​காலிக மதிப்​பெண் சான்​றிதழ் மே 22-ம் தேதி முதல் வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தேர்​வுத்​துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவர்​கள் மற்​றும் தனித்​தேர்​வர்​களின் மதிப்​பெண் சான்​றிதழ்​கள் ஆகஸ்ட் 12 முதல் விநி​யோகம் செய்​யப்பட உள்​ளன. மறுகூட்​டல், மறும​திப்​பீடு முடிவு​கள் சேர்த்து இந்த சான்​றிதழ்​கள் வழங்​கப்பட உள்​ளன.

பள்ளி மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​களி​லும், தனித்​தேர்​வர்​கள் அவர்​கள் தேர்​வெழு​திய மையங்​களி​லும் அசல் மதிப்​பெண் சான்​றிதழ்​களை பெற்​றுக் கொள்​ளலாம். இதுத​விர தனித்​தேர்​வர்​கள் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் போது சமர்ப்​பித்த அசல் மதிப்​பெண் சான்​றிதழ்​களை அவர​வர் தேர்​வெழு​திய மையங்​களி​லேயே பெற்​றுக் கொள்​ளலாம். கூடு​தல் விவரங்​களை http://www.dge.tn.gov.in/ வலை​தளத்​தில் அறிய​லாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT