கல்வி

ஆய்வக வைரத்தை பயன்படுத்தி குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு மேற்கொள்கிறது

செய்திப்பிரிவு

சென்னை: ஆய்​வகத்​தில் உரு​வாக்​கப்​பட்ட வைரத்தை பயன்​படுத்தி குவாண்​டம் தொழில்​நுட்​பம், போட்​டோனிக்ஸ் சென்​சிங், மெட்​ராலஜி ஆகிய துறை​களில் சென்னை ஐஐடி ஆய்​வுக்​குழு ஆராய்ச்சி மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த ஆராய்ச்​சியை உலகள​வில் எடுத்​துச் செல்ல முடிவு செய்​துள்​ளது. இதுதொடர்​பாக, சென்னை ஐஐடி வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பு: ஆய்​வகத்​தில் உரு​வாக்​கப்​பட்ட வைரத்​துக்​கான இந்​திய ஆராய்ச்​சிக் குழு என்ற அமைப்பு சென்னை ஐஐடி-​யில் இயங்கி வரு​கிறது.

          

மத்​திய வர்த்தக அமைச்​சகத்​தின் ஆதர​வுடன் நிறு​வப்​பட்ட இந்த ஆய்​வுக் குழு, உள்​நாட்டு தொழில்​நுட்​பங்​களை உரு​வாக்​கு​வதன் மூலம், செயற்கை வைரத் தொழில் துறை​யில் இந்​தி​யாவை உலகள​வில் முன்​னணி நாடாக உரு​வாக்​கும் நோக்​குடன் செயல்​பட்டு வரு​கிறது.

இந்​தியா தன்​னிறைவு பெறும் இதன் மூலம், ரத்​தினத் தரம் மற்​றும் மின்​னணு தரத்​திலான வைரங்​களை உற்​பத்தி செய்​வ​தில் இந்​தியா தன்​னிறைவு பெறும். இதனால், தொழில்​நுட்​பத் திறன்​கள் மேம்​படுத்​தப்​படும்.

ஏற்​றுமதி உயரும். புத்​தாக்​கத் தொழில் மற்​றும் தொழில்​முனை​வுத் திறன் வாயி​லாக நாட்​டின் பொருளாதார வளர்ச்சி ஏற்​படும். ஆய்​வகத்​தில் உரு​வாக்​கப்​படும் செயற்கை வைரங்​கள் பூமிக்கு கீழே வெட்டி எடுக்​கப்​படும் இயற்கை வைரங்​களின் வேதி​யியல் மற்​றும் ஒளி​யியல் பண்​பு​களையே கொண்​டுள்​ளன.

செயற்கை வைரங்​கள் ஆபரணங்​கள் நீங்​கலாக பிற பயன்​பாடு​களுக்கு மிக​வும் ஏற்​றவை. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தேசிய மையம் இந்த ஆராய்ச்சி பணி தொடர்​பாக, சென்னை ஐஐடி ஆராய்ச்​சிக் குழு​வின் முதன்மை ஆய்​வாளர் ராமச்​சந்​திர ராவ் கூறும் போது, “ஆய்​வகத்​தில் உரு​வாக்​கப்​பட்ட வைர தொழில்​நுட்​பங்​களுக்​கான நவீன வசதி​களை ஏற்​படுத்​தும் தேசிய மையத்தை அமைப்​பது​தான் எங்​கள் ஆராய்ச்​சிக் குழு​வின் தலை​யாய நோக்​கம்.

இது, உள்​நாட்டு தொழில்​நுட்​பங்​கள் மூலம் வைர வளர்ச்சி செயல்​முறை​களை மேம்​படுத்த உதவும். செயற்கை வைரத் தொழில் துறைக்கு தேவை​யான மனித வளத்தை உரு​வாக்​கும் பயிற்சி மற்​றும் பாடத் திட்​டங்​களும் விரை​வில் வழங்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT