கோப்புப்படம்

 
கல்வி

பள்ளி மாணவர் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு அக்.21 வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: கல்​வி உத​வித் தொகைக்​கான ஊரகத் திற​னாய்​வுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் அக்​.21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கிராமப்​புற மாணவர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ஊரகத் திற​னாய்வு தேர்வு திட்​டத்​தின்​கீழ் கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி பள்​ளி​களில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்​கள் இந்த திட்​டத்​தின்​கீழ் மாவட்​டம்தோறும் தலா 50 மாணவர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆண்​டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்​டு கிடைக்கும்.

நடப்​பாண்​டுக்​கான ஊரக திற​னாய்வு தேர்வு நவ.21-ல் நடக்கிறது. இதற்​கான விண்ணப்பப் பதிவு 15ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது மாணவர்​கள் நலன் கருதி​ கால அவகாசம் அக்​.21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT