கல்வி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடக்கம்

மாநில கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடங்குகிறது.

மாநில கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. நாடு​ முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்​ கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்​கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.

இந்​நிலை​யில், எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 2025 - 26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான அகில இந்​திய கலந்​தாய்வு முதல் சுற்று https://mcc.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் 4-ம் தேதி (நாளை) தொடங்கி 17-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

இட ஒதுக்​கீடு பெற்ற மாணவர்​கள் 22-ம் தேதிக்​குள் கல்​லூரி​களில் சேர வேண்​டும். மாணவர்​களின் சான்​றிதழ் சரிப்​பார்ப்பு பணி​களை 23-ம் தேதிக்​குள் கல்​லூரி நிர்​வாகம் முடிக்க வேண்​டும்.

இதையடுத்​து, இரண்​டாம் சுற்று கலந்​தாய்வு ஆக. 24-ம் தேதி​யும், மூன்​றாம் சுற்று கலந்​தாய்வு செப்​. 10-ம் தேதி​யும், இறுதி சுற்று கலந்​தாய்வு செப். 27-ம் தேதி​யும் தொடங்கி நடை​பெறுகிறது.

அதே​போல், தமிழகத்​தில் அரசு மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​து​வக் கல்​லூரி​களில் மீத​முள்ள 85% எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​கள், தனி​யார் கல்லூரி​களில் அரசு ஒதுக்​கீடு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்​கான இடங்​களுக்கு கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது.

நடப்​பாண்டு முதல் சுற்று கலந்​தாய்வு https: //tnmedicalselection.net/ என்ற இணை​யதளத்​தில் வரும் 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. 2-​ம் சுற்று கலந்​தாய்வு வரும் 31-ம் தேதி​யும், 3-ம் சுற்று கலந்​தாய்வு செப்​டம்​பர் 16-ம் தேதி​யும், இறுதி சுற்று கலந்​தாய்வு அக்​டோபர் 3-ம் தேதி​யும் தொடங்​கி நடைபெறவுள்​ளது.

SCROLL FOR NEXT