க்ரைம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்​தரவு அளித்த வழக்​கில், இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை நொளம்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்​கும், ஜான் ஓபெத் (24) என்ற இளைஞருக்​கும் இன்​ஸ்​டாகி​ராம் வழி​யாக பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில், அந்த இளைஞர் மாணவிக்கு தொடர்ச்​சி​யாக பாலியல் தொந்​தரவு கொடுத்து வந்​த​தாக மாண​வி​யின் தாயார் கடந்த 2021-ம் ஆண்டு திரு​மங்​கலம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தார். போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டு, ஜான் ஓபெத்தை கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

சென்னை மகளிர் சிறப்பு நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. குற்​றச்​சாட்டு சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டதை அடுத்​து, ஜான் ஓபெத்​துக்கு போக்சோ சட்​டப் பிரி​வின்​கீழ் 20 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி பிர​பாகரன் தீர்ப்​பளித்​தார்.

‘அப​ராதத் தொகையை கட்​டத் தவறி​னால் மேலும் 6 மாதங்​கள் சிறை தண்​டனை அனுபவிக்க வேண்​டும். அபராதத் தொகை பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் மறு​வாழ்​வுக்​காக வழங்​கப்பட வேண்​டும். பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்​பில் ரூ.5 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும்’ என்​றும் தீர்ப்​பில் அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT