முதல்வர் பதக்கம் வழங்கும் விழாவில் போலீஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி

இருசக்கர வாகனங்களில் காவலர்கள் சாகசம்
சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வரிடம் பதக்கம் பெற்ற ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், ராதிகா, லோகநாதன்.

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வரிடம் பதக்கம் பெற்ற ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், ராதிகா, லோகநாதன்.

Updated on
2 min read

சென்னை: தமிழக காவல்​துறை​யில் சிறப்​பாக பணி​யாற்​றிய அதி​காரி​கள், போலீ​ஸாருக்கு குடியரசுத் தலை​வர், மத்​திய உள்​துறை அமைச்​சர் மற்​றும் தமிழக முதல்​வர் பதக்​கங்​கள் வழங்​கும் விழா, சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று மாலை நடை​பெற்​றது. இந்த விழா​வில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்டு பதக்​கங்​களை வழங்​கி​னார்.

இந்த நிகழ்​வில், மெய்​சிலிர்க்க வைக்​கும் வகை​யில் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதற்கு போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் அன்​பரசி தலைமை தாங்கி பாராட்​டு​களை பெற்​றார். ஆண் காவலர்​களும் பல்​வேறு வகை​யான சாகசங்​களில் ஈடு​பட்டு கைதட்​டு​களை குவித்​தனர்.

50-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் துப்​பாக்​கி​களை கையில் சுழற்​றியபடி இங்​கும், அங்​கு​மாக சென்று பார்​வை​யாளர்​களின் பாராட்​டு​களை பெற்​றனர். ஒவ்​வொரு நிகழ்​வு​களின்​போதும் பின்​னணி​யில் முதல்​வர் நடித்த விஜய் திரைப்​படங்​களின் பாடல்​கள் ஒலித்​தன.

விழாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண் இன்​ஸ்​பெக்​டர் அன்​பரசி. படங்கள்: எஸ்.சத்தியசீலன்

விழாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண் இன்​ஸ்​பெக்​டர் அன்​பரசி. படங்கள்: எஸ்.சத்தியசீலன்

நிகழ்ச்சி முடிந்து முதல்​வர் புறப்​பட்டு சென்ற உடன் பதக்​கம் பெற்​றவர்​கள் தாங்​கள் பெற்ற பதக்​கங்​களு​டன் குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களு​டன் போட்​டோ, செல்​பி, வீடியோ எடுத்து மகிழ்ந்​தனர். முன்​ன​தாக நிகழ்ச்சி நடை​பெற்ற ராஜரத்​தினம் அரங்​கத்​தில் ஆயிரக்​கணக்​கானோர் திரண்​டிருந்​தனர்.

சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்கள் சக்திவேல், ராமமூர்த்தி, பதக்கம் பெற்ற கூடுதல் துணை ஆணையர் சங்கரலிங்கம். ஆவடி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மணிவண்ணன். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன்.

சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்கள் சக்திவேல், ராமமூர்த்தி, பதக்கம் பெற்ற கூடுதல் துணை ஆணையர் சங்கரலிங்கம். ஆவடி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மணிவண்ணன். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன்.

நிகழ்ச்​சியை ஆங்​காங்கே காணும் வகை​யில் டிஜிட்​டல் திரை அமைக்​கப்​பட்​டிருந்​தது. அதில், முதல்​வர் முகம் காண்​பிக்​கும்​போதெல்​லாம் அனை​வரும் உற்​சாக கோஷமிட்​டனர். நிகழ்ச்​சிக்​கான ஏற்​பாடு​களை ஆயுதப்​படை கூடு​தல் டிஜிபி தினகரன் சிறப்​பாக செய்​திருந்​தார்.

பதக்​கம் பெற்​றவர்​கள் ஏமாற்​றம்

பதக்​கம் பெறு​பவர்​கள் அனை​வருக்​கும் முதல்​வர் விஜய் அவரது கைகளாலேயே பதக்​கங்​களை வழங்​கு​வார் என ஆவலுடன் எதிர்​பார்த்​தனர். இந்த காட்​சிகளை காண​வும், மகிழ்ச்​சியை பகிர்ந்து கொள்​வதற்​கும் தங்​களது குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​களை அழைத்து வந்​தனர்.

ஆனால், 72 பேருக்கு மட்​டுமே முதல்​வர் பதக்​கம் கொடுத்​தார். முதல்​வர் கையால் பதக்​கம் பெற முடி​யாத வருத்​தம், ஏமாற்​றம் ஒரு பக்​கம் இருந்​தா​லும், விழா​வில் முதல்​வரைப் பார்த்த மகிழ்ச்​சி​யை போலீ​ஸார்​ மற்​றும்​ அவர்​களது குடும்​பத்​தினரிடம்​ காண முடிந்​தது.

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வரிடம் பதக்கம் பெற்ற ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், ராதிகா, லோகநாதன்.

அம்பத்தூரில் ரூ.16.10 லட்சம் கடனுக்காக ரூ.1.15 கோடி வசூலித்தவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in