தீபக் மீனா

 
க்ரைம்

ஆவடி: வாட்ஸ்-அப் மூலம் போலி குறுஞ்செய்தி அனுப்பி ரூ.1.90 கோடி மோசடி - டெல்லி இளைஞர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் நிறு​வனத்​தின் பொது மேலா​ளர் சவுந்​தர்​ராஜனுக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, அந்​நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அனுப்​புவது போன்று வாட்​ஸ்​-அப் மூலம் குறுஞ்​செய்தி ஒன்று வந்​துள்​ளது.

அதில் குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​கில் ரூ.1.90 கோடி பணத்தை செலுத்​து​மாறு குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. அதனை நம்​பிய சவுந்​தர்​ராஜன், குறுஞ்​செய்​தி​யில் குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​கில் ரூ.1.90 கோடியை அனுப்​பி​னார். அதன்​பிறகே குறுஞ்​செய்தி போலி என்​ப​தை​யும், தான் ஏமாற்​றப்​பட்​டதை​யும் அறிந்​தார்.

இதுகுறித்து சவுந்​தர்​ராஜன் அளித்த புகாரின் பேரில் ஆவடி, இணைய வழிக் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு விசா​ரணை மேற்​கொண்​டனர். அவ்​வி​சா​ரணை​யில் புதுடெல்​லியைச் சேர்ந்த தீபக் மீனா (27) மோசடி செய்​யப்​பட்ட ரூ.1.90 கோடியை தன் வங்​கிக் கணக்​கில் பெற்​று, அதை பல்​வேறு வங்​கி​களில் மாற்​றியது தெரிய​வந்​தது.

இதையடுத்து வங்​கிக் கணக்கு விவரங்​களின் அடிப்​படை​யில் ஆவடி இணைய வழி குற்​றப்​பிரிவு போலீ​ஸார் புதுடெல்லி சென்று தீபக் மீனாவைக் கைது செய்​து, பொது​மக்​களை ஏமாற்​றப் பயன்​படுத்​திய செல்​போன்​களை அவரிட​மிருந்து பறி​முதல் செய்​தனர்.

தொடர்ந்து தீபக் மீனாவை நேற்று முன்​தினம் போலீ​ஸார் பூந்​தமல்லி நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி நீதி​மன்​றக் காவலுக்கு உட்​படுத்​தினர். இவ்​வழக்​கில் தொடர்​புடைய மற்ற எதிரி​களை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT