க்ரைம்

சென்னை | திருமண மண்டபத்தில் உடை மாற்றிய பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தாழம்​பூர், செம்​மஞ்​சேரி பகு​தி​யைச் சேர்ந்த 50 வயது பெண் ஒரு​வர் சேத்​துப்​பட்டில் உள்ள திருமண மண்​டபத்​தில் கடந்த 14-ம் தேதி நடை​பெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்​டார்.

மறு​நாள் காலை மண்​டபத்​தில் உள்ள குளியல் அறை​யில் உடைகளை மாற்​றிக் கொண்​டிருந்​தார். அப்​போது, ஜன்​னல் வழி​யாக யாரோ வீடியோ எடுப்​பது​போல் தெரிந்​தது. இதைக்​கண்டு அப்​பெண் கூச்​சலிட​வே, அந்த நபர் தப்பி ஓடி​னார்.

          

மண்​டபத்​தில் திரண்​டிருந்த உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​கள் வீடியோ எடுத்த இளைஞரை மடக்​கிப் பிடித்து காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

போலீ​ஸாரின் விசா​ரணை​யில் பிடிபட்​ட​வர் வேளச்​சேரியைச் சேர்ந்த பிரபு(29) என்​பதும், திரு​மணத்​துக்கு அலங்​காரம் செய்ய வந்த பெண்​ணின் கணவர் என்​பதும் தெரிந்​தது. திருமண மண்டப குளியல் அறை​யில் பலமுறை இதே​போல் ரகசிய வீடியோ எடுத்​தது தெரிய​வந்​தது. பிரபுவை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT