சென்னை: வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று இளம் பெண் ஒருவர் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து அதில் இருந்த விஷத்தை குடிக்க முயன்றார்.
இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, விஷப்பாட்டிலை பறிமுதல் செய்து, அந்த பெண்ணை காப்பாற்றினர்.
பின்னர், போலீஸாரின் விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (38) என்பது தெரியவந்தது.
காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார். இந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள வந்தேன்.
என்னை ஏமாற்றிய காதலன் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் அவர் முறையிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.