சென்னை: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏலியாஹூ (22) சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சிறிது மன அழுத்தமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஏலியாஹூ, 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.