க்ரைம்

ஜனநாயகன் பட ‘குட் டச், பேட் டச்’ காட்சியை பார்த்த சிறுமி தந்தையிடம் தகவல்: தாய் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் ‘போக்சோ’வில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்​படம் மூலம் ‘குட் டச், பேட் டச்’ குறித்து அறிந்​து​கொண்ட 8 வயது சிறுமி தனக்​கும் அது​போன்ற கொடுமை நடந்​த​தாக தந்​தை​யிடம் கூறி​னார்.

இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்ட நபரை போக்சோ சட்​டத்​தில் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்​னையைச் சேர்ந்த தம்​ப​திக்கு 11 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்​ளனர். கருத்து வேறு​பாடு காரண​மாக தம்​ப​தி​யர் இரு​வரும் கடந்த சில மாதங்​களாக பிரிந்து வாழ்​கின்​றனர். குழந்​தைகள் இரு​வரும் தந்​தை​யுடன் வசிக்​கின்​றனர்.

தாய் கோடம்​பாக்​கத்​தில் உள்ள ஒரு வீட்​டில் தங்​கி, வேலை செய்து வரு​கிறார். தான் வேலை செய்​யும் வீட்​டுக்கு அவ்​வப்​போது குழந்​தைகளை​யும் அழைத்​துச் செல்​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், கடந்த 30-ம் தேதி தந்தை தனது மகளை அழைத்​துக் கொண்டு ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்​துக்​குச் சென்​றுள்​ளார். படத்​தில் இடம்​பெற்ற ‘குட் டச், பேட் டச்’ தொடர்​பான காட்​சி​யைப் பார்த்த சிறுமி, படம் முடிந்த பிறகு தந்​தை​யிடம், தனக்​கும் இது​போன்ற சம்​பவம் நடந்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த தந்​தை, யார் இது​போன்ற செயலில் ஈடு​பட்​டார் என்று கேட்​டுள்​ளார். தாய் வேலை செய்​யும் வீட்​டுக்​குச் சென்​ற​போது, அந்த வீட்​டின் உரிமை​யாளர் தன்​னிடம் தவறாக நடந்​து​கொண்​ட​தாக சிறுமி கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து வடபழனி மகளிர் காவல் நிலை​யத்​தில் தந்தை புகார் கொடுத்​தார். சிறுமி​யிடம் போலீ​ஸார் விசா​ரித்​த​தில், பாலியல் அத்​து​மீறல் நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, வீட்டு உரிமை​யாளர் சண்​முகப் பிரியன் (40) மீது போக்சோ சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர்.

இதுகுறித்து சமூக ஆர்​வலர்​கள் கூறிய​போது, ‘‘பாலியல் குற்​றங்​கள், குறிப்​பாக சிறார்​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தல்​களைத் தடுப்​ப​தில் விழிப்​புணர்வு மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. அதி​லும், சிறு​வர்​கள் விரும்​பிப் பார்க்​கும் திரைப்​படத்​தில் ‘குட் டச், பேட் டச்’ குறித்த காட்சி இடம்​பெற்​று, அதன்​மூலம் ஒரு சிறுமி​யிடம் விழிப்​புணர்​வும் ஏற்​பட்​டுள்​ளது.

அந்த திரைப்​படத்​தைப் பார்த்​த​போது, தன் மீது பாலியல் அத்​து​மீறல் நடந்​துள்​ளது என்​பதை புரிந்​து​கொண்ட சிறுமி, உடனடி​யாக தந்​தை​யிடம் தெரி​வித்​துள்​ளார். தங்​கள் மீது பாலியல் அத்​து​மீறல் நடந்​தால், குழந்​தைகள் மறைக்​காமல், தைரிய​மாக பெற்​றோர், ஆசிரியர் அல்​லது நம்​பக​மான பெரிய​வர்​களிடம் தெரிவிக்க வேண்​டும் என்ற விழிப்​புணர்வை திரைப்​படக்​ காட்​சி ஏற்​படுத்​தி​யுள்​ளது’’ என்​றனர்​.

SCROLL FOR NEXT