சென்னை: மாதவரம் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் வசிப்பவர் பிஜய்குமார். இவரது மகள் பலக் பெங்காலி (14), சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவ ருக்கு கடந்த சில நாட்களாக சுவாசப் பிரச்சினை இருந்து வந்ததால், சுவாசப் பயிற்சிக்காக பெற்றோர் அவரை ஜிம்முக்கு அனுப்பியுள்ளனர்.
அப்போது, ஜிம் பயிற்சி யாளரான மணலி எழில் நகரைச் சேர்ந்த பசூல் ரஹ்மான் (27) என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை
செய்து கொள்ளப் போவதாக 25-ம் தேதி இரவு இரவு ஜிம் பயிற்சியாளருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
சிறுமியின் வீட்டுக்கு விரைந்து வந்த பசூல் ரஹ்மான், அவரை கீழே வரவழைத்து அறிவுரை கூறியதாகத் தெரிகிறது. அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு, 13-வது மாடிக்குச் சென்ற சிறுமி, அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் படுகாய மடைந்த சிறுமியை பெற் றோர், பெரியார் நகர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜிம் பயிற்சி யாளர் பசூல் ரஹ்மான் மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் மாத வரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரச்சினைக்கு தற்கொலை தீர்வல்ல
“தற்கொலை என்பது எந்த வொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை தொடர்பான தவறான சிந்தனைகள் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்:044-2464000 (24/7), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்:104 (24/7), ஐகால் உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்'' என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.