ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பிரபாவதி (40) உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலராகப் பங்கேற்றார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள், அவரை கோயில் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, பிரபாவதி ரூ.1 லட்சத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்லதுரை ராமேசுவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரபாவதி கைது செய்யப்பட்டார்.