மாதிரி படம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் அம்மன்கோவில் தோட்டத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (58). கணவர் உயிரிழந்த நிலையில், இவர் மட்டும் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் கத்தியை வைத்தும், துப்பாக்கியைக் காட்டியும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.20,000 ரொக்கத்தைக் பறித்துவிட்டு தப்பினர். இதுதொடர்பாக ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.