உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு, தனியார் ஐடி நிறுவனத்தின் பெண் மேலாளர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உதய்பூரில் தனியார் ஐடி நிறுவன சிஇஓ ஜிதேஷ் சிசோடியா, கடந்த சனிக்கிழமை தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தில் பாதிக்கப்பட்ட பெண் மேலாளரும் விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்துக்குப் பின்னர் காரில் அழைத்துச்செல்லப்பட்டு அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சிஇஓ ஜிதேஷ் சிசோடியா, அந்த நிறுவனத்தின் ஒரு பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீரட்டைச் சேர்ந்த கௌரவ் சரோஹி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் வியாழக்கிழமை (டிச.25) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.