வேலன், வீரேந்தர்

 
க்ரைம்

திருவள்ளூர் | உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திமுக இளைஞரணி தலை​வரும் தமிழக சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான உதயநிதி ஸ்டா​லி​னின் 50-வது பிறந்​தநாளை முன்​னிட்டு திரு​வள்​ளூர் மாவட்​டம் எல்​லாபுரம் ஒன்​றியத்​துக்கு உட்​பட்ட வாணி​யன் சத்​திரம் பகுதி​யில், உள்ள திரு​மண மண்​டபம் ஒன்​றில் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கு​வதற்​கான ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டன.

இதற்​காக நேற்று முன்​தினம் இரவு சாலை​யில் நிகழ்ச்​சிக்​கான பேனர் வைக்​கும் பணி​யில் சிலர் ஈடு​பட்​டுக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது பேனரை தூக்​கிக் கட்​டும்​போது எதிர்​பாராத வித​மாக உயரத்​தில் சென்று கொண்​டிருந்த உயர் அழுத்த மின்​சார கம்​பி​யில் பேனர் உரசி​யதில் மின்​சா​ரம் பாய்ந்து அதே பகுதி​யைச் சேர்ந்த திமுக தொண்​டர்​களான வீரேந்​தர் (22), காரணி கிராமத்​தைச் சேர்ந்த வேலன் (30) ஆகிய இரு​வர் சம்​பவ இடத்​திலேயே உடல் கருகி பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.

மேலும் சம்​பவத்தில் காயமடைந்த ஆல்​பர்ட் (22) என்​பவர் சென்னை ஸ்​டான்லி மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வெங்​கல் போலீ​ஸார் உயி​ரிழந்த இரு​வரின் உடல்​களை​யும் கைப்​பற்றி உடற்​கூறு ஆய்​வுக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைத்து, மின்​விபத்து தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்​தச் சம்​பவம் திமுக தொண்​டர்​கள் இடையே சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT