க்ரைம்

சென்னை | ரூ.2 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: உயர் ரக கஞ்சா கடத்தி வந்த இரு​வரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். பாரி​முனை ராஜாஜி சாலை​யில் ஒரு கும்​பல் உயர் ரக கஞ்சா வைத்​திருப்​ப​தாக சென்னை காவல் துறை​யின் போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

அதன் அடிப்​படை​யில் அப்​பிரிவு போலீ​ஸாரும் வடக்கு கடற்​கரை காவல் நிலைய போலீ​ஸாரும் நேற்று அங்கு கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அந்த வழி​யாக இருசக்கர வாக​னத்​தில் வந்த இரு​வரை சந்​தேகத்​தின் பேரில் விசா​ரித்​தனர்.

அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதில் அளித்​த​தால், அவர்​கள் வைத்​திருந்த பையை சோதனை​யிட்​டனர். அப்​போது அவர்​களது பையில் ரூ.2 கோடி மதிப்​புள்ள இரண்டே கால் கிலோ உயர் ரக கஞ்சா இருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து போலீ​ஸார் அதைப் பறி​முதல் செய்து விசா​ரணை செய்​தனர். விசா​ரணை​யில் அவர்​கள் சென்னை ஏழுகிணறு வீரா​சாமி தெரு​வைச் சேர்ந்த அமிருதீன் (36), திரு​வொற்​றியூர் காலடிப்​பேட்​டையைச் சேர்ந்த நவீன்​கு​மார் (29) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​கள் கஞ்​சாவை எங்​கிருந்து யாருக்​காக கடத்தி வந்தனர் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT