கோப்புப் படம்

 
க்ரைம்

சென்னையில் பிரியாணி கடை நடத்திய வங்கதேசத்தினர் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி, சென்னையில் பிரியாணி கடை நடத்தி வந்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் கடந்த 6ம் தேதி சோதனை செய்து அனுப்பினர். அப்போது, முகமது ஆரூண் (44) என்பவர் போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வங்கதேசம் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் அவர் ஒப்படைக் கப்பட்டார்.

          

வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஆரூண், கடந்த 1999ம் ஆண்டு திரிபுராவின் ஸ்ரீமந்தாபூர் எல்லை வழியாக, சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். பின்னர், சட்ட விரோதமாக வங்கதேசத்துக்கு பலமுறை சென்று வந்துள்ளார். 2022-ல் தனது வங்கதேச பாஸ் போர்ட் மூலம் முறையாக இந்தியா வந்த இவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். பின்னர், சொந்தமாக பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார்.

தனது வங்கதேச குடியுரிமையை மறைத்து. போலியாக இந்திய ஆதார் மற்றும் பான் அட்டையை பெற்ற அவர், அதன் மூலம் இந்திய பாஸ் போர்ட்டும் பெற்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வங்க தேசத்தில் இருந்து இவரது உறவினரான வலி யுல்லா (40) என்பவரும் கடந்த 2025ல் திரிபுரா எல்லை வழியாக, சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர், சென்னைக்கு வந்த அவர், முகமது ஆரூணின் பிரியாணி கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 'பாபுல் உசேன்' என்ற பெயரில் அவர் போலி யாக ஆதார் அட்டை பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT