நவீன்

 
க்ரைம்

சிவகங்கையில் மதுக்கூடத்தில் தகராறு: தவெக பிரமுகர் கொலையில் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்​கை​யில் மதுக்​கூடத்​தில் ஏற்​பட்ட தகராறில் தவெகவைச் சேர்ந்த இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே பொன்​னாம்​பட்​டியைச் சேர்ந்தவர் நவீன் (26). தவெகவைச் சேர்ந்​தவ​ரான இவர், நேற்று மாலை சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுக்​கடையையொட்டி உள்ள மதுக்​கூடத்​துக்​குச் சென்​றார். மது அருந்​திக் கொண்​டிருந்​த​போது அவருக்​கும், அங்கு வந்த சிலருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டது. இதில், ஆத்​திரமடைந்​தவர்​கள் நவீனை வாளால் வெட்​டிக் கொன்றனர். அப்​போது மதுக்​கூடத்​தில் இருந்த மற்​றவர்​கள் அலறியபடி வெளியே ஓடினர்.

பின்​னர், தப்பியோடிய குற்​ற​வாளி​கள் தாங்கள் செல்​லும் வழி​யில் சூரக்​குளம் பகுதி​யில் நின்​று​கொண்​டிருந்த மக்களை அச்​சுறுத்​தி​விட்​டுச் சென்​றனர். தகவலறிந்து மதுக்​கூடம் முன்பாக திரண்ட நவீனின் உறவினர்​கள், கொலை​யாளிகளை உடனடியாகக் கைது செய்​யக்கோரி முழக்​கமிட்​டனர் இதையடுத்து அங்கு விரைந்து வந்த எஸ்பி சிவப்​பிர​சாத், டிஎஸ்பி அமல அட்​வின் மற்​றும் சிவகங்கை நகர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதன்தொடர்ச்சியாக, டி.புதூரைச் சேர்ந்த மதன்ராஜ், சிவகங்கை போஸ் சாலையைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

ஏற்​கெனவே இந்த மதுக்​கூடத்​தில் அடிக்​கடி மோதல்​கள் ஏற்​பட்டுள்ளன. அதோடு மிக அரு​கிலேயே ரயில் நிலை​யம், கோயில் உள்​ளன. இதனால், இந்த மதுக்​கடையை அகற்ற வேண்​டுமென அப்​பகுதி மக்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கோயிலுக்கு அரு​கே​யுள்ள மதுக்கடையை மூட உத்​தர​விட்​டும் அதிக வரு​வாய் வரு​வ​தால் இந்த மதுக்​கடையை மூட​வில்​லை. அதற்​குப் பதிலாக மக்​களுக்கு இடையூறு இல்​லாத கடையை மூடி​யுள்​ள​தாக கூறப்படுகிறது. இனி​யா​வது பிரச்​சினைக்​குரிய இந்த மதுக்​கடையை மூட கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT