சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர், டாக்டர் கானு நகர், இந்திரா தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (34). வாட்டர் பியூரிபையர் சர்வீஸ் இன்ஜினீயராக பணி செய்து வருகிறார்.
இவர், வெளியூர் சென்றுவிட்டு கடந்த 17-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர். நகர் காசி தியேட்டர் அருகே உள்ள முறுக்கு கடை வாசலில் தூங்கினார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில், எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
முதல் கட்டமாக போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.