தினேஷ், மெக்கலன்.
சென்னை: கூரியர் மூலம் தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் வாங்கி, கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
குறிப்பாக போதைப்பொருள் கும்பலை கைது செய்ய சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு போலீஸார் காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸார் வானகரம் போலீஸாருடன் இணைந்து வானகரம் அடையாளம்பட்டு, சர்வீஸ் ரோட்டில் நேற்று கண்காணித்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 கார்களை மறித்து சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார் வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ் என்ற பப்லு (34), கொரட்டூரைச் சேர்ந்த மெக்கலன் ட்ரெவர் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 18 கிராம் மெத்தம்பெட்டமைன், 100 கிராம் உயர் வகை கஞ்சா, 1.3 கிலோ கஞ்சா, ரூ.1.12 லட்சம், 4 செல்போன்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், தினேஷ் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதும், மெக்கலன் ட்ரெவர் இருசக்கர வாகன மெக்கானிக் என்பதும் இருவரும் தாய்லாந்திலிருந்து கூரியர் மூலம் போதைப்பொருட்களை வாங்கி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.