க்ரைம்

திருத்தணி | சிறுவனை கொன்று புதைத்தது தொடர்பாக 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருத்தணி: திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணி அருகே முருக்​கம்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்​தவர் முரு​கன் என்​கிற பால​முரு​கன் (48). இவர், அப்​பகு​தி​யில் உள்ள விவ​சாய நிலத்தை குத்​தகைக்கு எடுத்​து, ஆடு மற்​றும் கோழி பண்ணை நடத்தி வரு​கிறார்.

இவரது பண்​ணை​யில் பணி செய்ய திருத்​தணி, இந்​திரா நகரை சேர்ந்த வினோத், கடந்த 8 மாதங்​களுக்கு முன்பு தன் உறவின​ரான வெண்​ணிலா மற்​றும் அவரது 3 மகன்​களை அனுப்பி வைத்​துள்​ளார்.

அங்கு வெண்​ணிலா, தன் 3 மகன்​களு​டன் தங்​கி, ஆடு மேய்க்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். இவர்​களு​டன் வினோத்​தும் பணிபுரிந்துள்​ளார். இதற்​கிடையே கடந்த 4 மாதங்​களுக்கு முன் வெண்​ணிலா​வின் மூத்த மகன் சுரேஷ் (15), சரிவர ஆடு மேய்க்​க​வில்லை எனக் கூறி, அவரை ஆட்டு பண்ணை உரிமை​யாளர் பால​முரு​கன் கடுமை​யாக தாக்​கி​யுள்​ளார்.

படு​காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​துள்​ளார். இதையடுத்து பால​முரு​கன், வெண்​ணிலா​வின் உறவினர் வினோத்​தின் உதவி​யுடன், சுரேஷின் உடலை பண்ணை வளாகத்​தில் புதைத்​து​விட்​டு, யாருக்​கும் சந்​தேகம் வராத வகை​யில் அதன் மேல் சிமென்ட் தரை போல் பூசி மறைத்​துள்​ளார்.

மேலும், பாலமுரு​க​னும், வினோத்​தும் சுரேஷ் கொலை குறித்து வெளி​யில் தெரி​யாமல் இருக்க, வெண்​ணிலா, 2 சிறு​வர்​களை பண்​ணை​யில் அடைத்து வைத்துள்​ளனர்.

இந்​நிலை​யில், ஆட்​டுப் பண்​ணை​யில் அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த வெண்​ணிலா நேற்று முன் தினம் அங்​கிருந்து தப்​பி, திருத்​தணி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் பால​முரு​கன், வினோத் இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். சுரேஷின் உடல் பொக்​லைன் மூலம் தோண்​டி​யெடுக்​கப்​பட்​டு, வரு​வாய்த் துறை​யினர் போலீ​ஸார் முன்​னிலை​யில்​, திரு​வள்​ளூர்​ அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை குழு​வின​ரால்​ பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT