சிலம்​பரசன், பிரபு

 
க்ரைம்

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல பன்​னாட்டு நிறு​வனங்​களில் அதிக சம்​பளத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக ஆசை வார்த்தை கூறி, 100-க்​கும் மேற்​பட்​டோரிடம் ரூ.2 கோடிக்​கும் அதி​க​மாக பணம் பெற்று மோசடி செய்த வழக்​கில் 2 பேரை சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் கைது செய்​தனர்.

சென்னை பெருங்​குடி பகு​தி​யைச் சேர்ந்த பிரதீப்​ராஜா (27), முது​நிலை அறி​வியல் பட்​டம் பெற்​றவர். இவர் தனி​யார் மென்​பொருள் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இவரிடம், மதுர​வாயல் பகு​தி​யில் தனி​யார் நிறு​வனம் நடத்தி வந்த திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த சிலம்​பரசன் (35), சென்னை மதுர​வாயலைச் சேர்ந்த பிரபு (41) மற்​றும் அவர்​களது கூட்​டாளி​கள், முன்​னணி பன்​னாட்டு நிறு​வனங்​களில் அதிக சம்பளத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், வேலை வாங்​கித் தரு​வ​தாக போலி வாக்​குறுதி அளித்து பலரிடம் பணம் வசூலித்​தது உறு​தி​யானது.

இதனைத் தொடர்ந்து தலைமறை​வாக இருந்த முக்​கிய குற்​ற​வாளி​யான திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த சிலம்​பரசனை அவரது மாவட்​டத்​திலேயே நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

மேலும், சென்னை மதுர​வாயலில் பதுங்​கி​யிருந்த பிரபு​வும் கைது செய்​யப்​பட்​டார். அவர்​களிடம் இருந்து 2 செல்​போன்​கள் மற்​றும் வழக்கு தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

மேலும் சிலருக்கு தொடர்பு

முதல் கட்ட விசா​ரணை​யில், வேலை​வாய்ப்பு தேடும் இளைஞர்​களின் அவசரத்தை பயன்​படுத்​தி, பிரபல நிறுவனங்​களில் நேரடி நியமனம் செய்து தரு​வ​தாகக் கூறி பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வசூலித்​தது தெரிய​வந்​துள்​ளது.

இந்த மோசடி​யில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற கோணத்​தி​லும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. கைது செய்​யப்​பட்ட இரு​வரும் நேற்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

மேலும் பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் வேறு யாரேனும் இருந்​தால் முன்​வந்து புகார் அளிக்​கு​மாறு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT