க்ரைம்

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது

செய்திப்பிரிவு

திருவாரூர்: ​திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக ஒன்​றிய செய​லா​ளர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​வாரூர் பேருந்து நிலை​யத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த 27 வயதுடைய இளம்​ பெண், தனது தந்தை வரு​கைக்​காக காத்​திருந்​தார். அப்​போது திருத்​துறைப்​பூண்டி அருகே ஆலத்​தம்​பாடி கரும்​பியூர் பகு​தி​யைச் சேர்ந்​தவரும், தவெக திருத்​துறைப்​பூண்டி ஒன்​றிய செய​லாளரு​மான ஆனந்த் ​(34), இவரது நண்​பர் அசோக்​(32) ஆகியோர் தனி​யாக நின்று கொண்​டிருந்த அந்த பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்​துள்​ளனர்.

அப்​போது அங்கு வந்த இளம்​பெண்​ணின் தந்​தை, அவர்​களை கண்​டித்​ததுடன், தனது மகளு​டன் சென்று திரு​வாரூர் நகர காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து ஆனந்த், அசோக் ஆகியோரை கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT