சக்​திவேல்

 
க்ரைம்

வாக்களித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: ​திருப்​பத்​தூர் தொகு​தி​யில் வாக்​களித்​ததை செல்​போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்த தவெக நிர்​வாகியை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

திருப்​பத்​தூர் மாவட்​டம் கந்​திலி அடுத்த குனிச்சி பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஓட்​டுநர் சக்​திவேல் (30). இவர், சமீபத்​தில் தவெகவில் இணைந்து அக்​கட்சி சார்​பில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர் மருத்​து​வர் திருப்​ப​தி​யுடன் தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வந்​தார்.

இந்​நிலை​யில், குனிச்சி அரசு மேல்​நிலை பள்​ளி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்கு சாவடி மையத்​துக்கு சக்​திவேல் நேற்று காலை தனது வாக்​கினை செலுத்த சென்​றார்.

அப்​போது, அங்கு வாக்​காளர்​கள் செல்​போன்​களை வாக்கு பதிவு மையத்​துக்​குள் எடுத்து செல்​லக்​கூ​டாது என தேர்​தல் அதி​காரி​கள் விதித்த கட்​டுப்​பாட்டை மீறி சக்​திவேல் தன்​னுடைய செல்​போனை மறைத்து வாக்கு பதிவு மையத்​துக்​குள் எடுத்​துச்​சென்​றுள்​ளார்.

அங்கு தவெக வேட்​பாள​ருக்கு விசில் சின்​னத்​தில் பொத்​தானை அழுத்​தி, விவி​பாட் இயந்​திரத்​தில் வந்த ஒப்​பு​கைச் சீட்டை வீடியோ எடுத்து அதை சமூகவலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​தார்.

இந்த வீடியோ வைரலானது. விதிகளை மீறிய சக்​திவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. இதன்பேரில் கந்​திலி போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து அவரை கைது செய்தனர்​.

SCROLL FOR NEXT