102 வயதில் வாக்குச்சாவடி வந்து வாக்களித்த முதல்வரின் தாய்மாமா

திருவாரூர் நன்னிலம் தொகுதி, கோவில்திருமாளத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு வந்த முதல்வரின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி.

திருவாரூர் நன்னிலம் தொகுதி, கோவில்திருமாளத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு வந்த முதல்வரின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி.

Updated on
1 min read

திருவாரூர்: ​முதல்​வர் ஸ்​டா​லினின் தாய்மாமாவான தட்சிணா​மூர்த்​தி, தனது 102 வயதி​லும் வாக்​குப்பதிவு மையத்​துக்கு வந்து நேற்று வாக்​குச் செலுத்​தி​னார்.

திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலம் வட்​டம் கோவில் திரு​மாளம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் தட்​சிணா​மூர்த்​தி(102). மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மைத்​துனரும், முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் தாய்​மா​மாவு​மான இவர் நேற்று அங்​குள்ள வாக்​குச்​சாவடி மையத்​துக்கு வந்து வாக்​களித்​தார்.

பின்​னர் அவர் கூறியது: என்​னிடம் தேர்​தல் அதி​காரி​கள் தபால் வாக்கு செலுத்த கேட்​டுக் கொண்​டனர்.

ஆனால், நான் வாக்​குச் சாவடிக்கு நேரில் வந்து தான் வாக்​களிப்​பேன் எனக் கூறி அதை மறுத்​து​விட்​டேன். இந்​தத் தேர்​தலில் திமுக திரா​விட மாடல் ஆட்​சி, நிச்​ச​யம் தொடரும் என்​றார்​.

<div class="paragraphs"><p>திருவாரூர் நன்னிலம் தொகுதி, கோவில்திருமாளத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு வந்த முதல்வரின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 ஏப்ரல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in