க்ரைம்

சிறுமியை இரண்டாம் திருமணம் செய்த தவெக நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி கம்​பரசம்​பேட்டையைச் சேர்ந்​தவர் கார்த்​திக்​ (39). ஸ்ரீரங்​கம் தொகுதி அந்​தநல்​லூர் ஒன்​றிய தவெக இணைச்​செயலா​ள​ராக உள்​ளார்.

இவருக்கு திரு​மண​மாகி, 2 குழந்​தைகள் உள்​ளனர். ஆனாலும், 17 வயது சிறுமியை காதலித்து வந்​துள்​ளார். சிறுமி​யின் பெற்​றோர் 2023-ல் கொடுத்த புகாரின்​பேரில் ஜீயபுரம் போலீஸில் இவர் மீது வழக்கு உள்ளது.

இந்​நிலை​யில், அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் திரு​மணம் செய்து குடும்​பம் நடத்தி உள்​ளார். இதுகுறித்த புகாரின்​பேரில் போலீ​ஸார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT