க்ரைம்

சென்னைக்கு 101 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

சென்னை

சென்னை: வெளி​மாநிலத்​தில் இருந்து சென்​னைக்கு 101 கிலோ கஞ்சா கடத்​திய வழக்​கில், 3 பேருக்கு தலா 14 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து சென்னை போதைப்​பொருள் கடத்​தல் வழக்​கு​களுக்​கான சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

கர்​நாட​காவைச் சேர்ந்த ஜிபன் பிஸ்​வாஸ் மற்​றும் ஒடிசாவைச் சேர்ந்த பலராம் புஜாரி, சாஷி குமார்ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டுபிப்​ர​வரி 11-ம் தேதி இரு கார்​களில் 101 கிலோ கஞ்​சாவைகடத்தி வரு​வ​தாக பள்​ளிக்​கரணை மது​விலக்கு அமலாக்​கப்​பிரிவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

அதன்​படி மது​விலக்கு போலீ​ஸார் பள்​ளிக்​கரணை காமாட்சி மருத்​து​வ​மனை அருகே வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது கஞ்சா கடத்தி வந்த இரு கார்​களை​யும் போலீ​ஸார் மடக்கி கஞ்​சாவை​யும், கார்​களை​யும் பறி​முதல் செய்​தனர். கஞ்சா கடத்தி வந்த ஜிபன் பிஸ்​வாஸ் உள்​ளிட்ட மூவரை​யும் கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் சென்னை 2-வது கூடு​தல் போதைப் பொருள் தடுப்பு வழக்​கு​களுக்​கான சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஏ.எஸ்​.ஹரிஹரகு​மார் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்​றம் சாட்​டப்​பட்ட மூவருக்​கும் தலா 14 ஆண்​டு​கள் சிறை தண்​டனை மற்​றும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT