அஜித்குமார், கலைராஜன், குகன்

 
க்ரைம்

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இரு தவெக தொண்டர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்​பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்​தில், தவெக தொண்​டர்​கள் 2 பேர் உள்பட 3 பேர் உயி​ரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்​டம், புவனகிரியை அடுத்த மேல​குறி​யாமங்​கலம் கிராமத்​தைச் சேர்ந்த ஆசைமணி மகன் குகன் (24), கீழகுறி​யாமங்​கலம் கிராமத்​தைச் சேர்ந்​த ராமலிங்​கம் மகன் கலை​ராஜன் (41) - இரு​வரும் அந்​தந்த கிராமத்​தின் தவெக கிளை செய​லா​ளர்​களாக இருந்​தனர்.

நேற்று காலை இரு​வரும் எலக்ட்​ரிகல் வேலைக்​காக இருசக்கர வாக​னத்​தில் சிதம்​பரம் சென்​றனர். அங்கு வேலை கிடைக்​காத​தால் வீட்​டுக்கு திரும்​பிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது சி.​முட்​லூர் நான்கு வழிச்​சாலை மேம்​பாலம் அருகே வந்​த​போது, பின்​னால் வந்த மினி டெம்​போ குகன், கலை​ராஜன் வந்த இருசக்கர வாக​னம், அருகே திரு​வண்​ணா​மலை மாவட்​டம் போளூரைச் சேர்ந்த முரு​கன் மகன் அஜித்​கு​மார் (29) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்​துக்​குள்​ளானது.

காயமடைந்த மூவரும் சிகிச்​சைக்​காக சிதம்​பரம் அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து கிள்ளை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT