தஞ்சாவூர்: திருவையாறு அருகே சாலை விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷாஜாலி. இவரது மனைவி பெனாசிர் பேகம் (26) இவர் இன்று காலை தனது குழந்தைகள் முகமது ஜாசித் (10), முகமது ஹாலித்(5), முகமது ஜாவீத் (12) ஆகியோருடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு தஞ்சாவூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் அம்மன் பேட்டை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் பெனாசிர் பேகம் , குழந்தைகள் முகமது ஜாசித், முகமது ஹாலித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த முகமது ஜாவீத் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உடல்களை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலை விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.