க்ரைம்

சாலிகிராமத்தில் போதைப் பொருள் வைத்திருந்த துணை நடிகர் மகன், ஐடி ஊழியர் உட்பட மூவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் விருகம்​பாக்​கம் பகுதி​யில் தடை செய்​யப்​பட்ட மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருள் பதுக்கி வைத்து பயன்​படுத்​தப்​படுவ​தாகப் போதைப்​பொருள் நுண்​ணறி​வுத் தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு நேற்று முன் தினம் ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து, விருகம்​பாக்​கம் மற்​றும் சாலி​கிராமம் பகுதி​களில் போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர். அப்​போது, சாலி​கிராமம் தனலட்​சுமி காலனி​யில் மெத்​தம்​பெட்​டமைன் போதைப் ​பொருளு​டன் நின்​றிருந்த கவுஷிக் என்​பவரைப் போலீ​ஸார் பிடித்​தனர்.

அவரிட​மிருந்து 3 கிராம் மெத்​தம்​பெட்​டமைன் பறி​முதல் செய்​யப்​பட்​டது. தொடர்ந்து, கவுஷிக் அளித்த தகவலின்​பேரில் அபினேஷ், சந்​திரசேகர் ஆகிய இரு​வரை​யும் பிடித்த போலீ​ஸார், அவர்​களிட​மிருந்து மேலும் 4 கிராம் மெத்​தம்​பெட்​டமைனைப் பறி​முதல் செய்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பிடிபட்​ட​வர்​கள் ஈக்​காட்​டுத்​தாங்​கலைச் சேர்ந்த கவுஷிக் (31), சாலி​கிராமத்​தைச் சேர்ந்த அபினேஷ் (33), புரசை​வாக்​கத்​தைச் சேர்ந்த சந்​திரசேகர் (29) என்​பது தெரிய​வந்​தது.

இவர்​களில் கவுஷிக், சினிமா தயாரிப்பு நிறு​வனம் ஒன்​றில் மேலா​ளராகப் பணி​யாற்றி வரு​வதும், அவரது தந்தை தொலைக்​காட்​சித் தொடர்​களில் துணை நடிக​ராக நடித்து வரு​வதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

மேலும், சந்​திரசேகர், ஓஎம்​ஆர் பகுதி​யில் உள்ள தகவல் தொழில்​நுட்ப நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​வதும், அவரது தந்தை எழும்​பூரில் உள்ள கல்​லூரியில் பேராசி​ரியராகப் பணி​யாற்றி வந்​ததும், அபினேஷ் மீது ஏற்​கெனவே வழக்​கு​கள் இருப்​ப​தும் போலீ​ஸார் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்து, போதைப்​பொருள் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், மூவரை​யும் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அவர்​களுக்கு மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருள் எங்​கிருந்து கிடைத்​தது, இதன் பின்​னணி​யில் போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​கள் செயல்​படு​கின்​றனவா, வேறு யாருக்​காவது தொடர்பு உள்​ளதா என்​பது குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT